ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று தள்ளிப் போன காரியம் தானாகவே முடிவடையும் நாளாக இருக்கும். பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமை காண்பீர்கள். புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சினை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படும். பிள்ளைகளிடம் பேசும்பொழுது எச்சரிக்கையாக இருங்கள். உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.
அது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு எந்த விதமான வாக்குறுதிகளையும் கொடுக்காதீர்கள். இழுபறியாக இருந்த அரசாங்க வேலைகள் இப்பொழுது நல்ல முடிவுக்கு வரக்கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவும் இருக்கும். தொழில் வியாபாரம் கொஞ்சம் மந்தமாக தான் செல்லும். தனவரவு கிடைப்பதில் காலதாமதம் இருக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த பயணம் உங்களுக்கு வெற்றியை கொடுப்பதாக இருக்கும். மற்றவரிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள்.
அதாவது அவர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்த பிறகு அதற்கு ஏற்றார்போல் பொறுமை காப்பது இன்று ரொம்ப முக்கியம். இன்று நீங்கள் வெளியில் செல்லும் பொழுது ஆரஞ்சு நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்று அன்னாபிஷேகத்தை கண்டு மகிழுங்கள். அன்னாபிஷேகத்தை மட்டுமே கண்டுவிட்டால் உங்களுடைய செல்வநிலை என்றுமே குறையாது.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3#
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்