ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிட்டும். உத்தியோக முன்னேற்றம் பற்றிய சிந்தனை தலை தூக்கும். விண்ணப்பித்த புதிய வேலை கிடைக்கும். நீண்ட நாளைய எண்ணங்கள் இன்று நிறைவேறும். இன்று தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறி செல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது.
சமூக பிரச்சினைகளை கையாளுபவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். நண்பர்களால் சின்ன சின்ன பிரச்சனைகள் வரக்கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். வீணாக சேமிப்புகளைக் கரைக்க வேண்டாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.
ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று நீங்கள் முக்கியமான காரியத்தை செய்யும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் செல்வ யோகம் ஏற்படும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறம்