ரிஷபம் ராசி அன்பர்களே..!! உங்கள் செயல்களில் தைரியம் இன்று கூடும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உற்பத்தி விற்பனை செழிப்பாக இருக்கும். பண கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். இன்று மாணவர்கள் தடைகளை தாண்டி முன்னேறி செல்லக்கூடும். விளையாட்டு துறையில் முன்னேற்றமான சூழல் இருக்கும். இன்று இழுபறியாக இருந்த காரியங்கள் அனைத்துமே சிறப்பாக முடியும். அது மட்டுமில்லாமல் அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
கவனம் என்பது எப்பொழுதுமே இருக்கட்டும். கலைத் துறையைச் சார்ந்தவர்களுக்கு அன்பும் பாசமும் இருக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம். புதிதாக வீடு மனை வாங்க வேண்டும் என்ற யோசனை செய்தவர்களின் எண்ணம் நிறைவேறும். இன்று கூடுமானவரை நீங்கள் நினைத்தது நடக்கும். காரியங்களை மட்டும் கொஞ்சம் பொறுமையாக செய்யுங்கள் அது போதும். குடும்பத்தில் எந்த விதமான வாக்கு வாதங்கள் வேண்டாம்.
இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாடு உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். அனைத்து காரியங்களையும் நல்லபடியாக செய்து கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்