ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பாராத இடங்களில் இருந்தும் பலவழிகளிலும் பணவரவு ஏற்படும். பொருளாதாரம் உயரும். தொழில் சிறப்பாக நடக்கும். பெரியோர்கள் நண்பர்களின் சந்திப்பால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்பு நீங்கும். தொழில் வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும்.
வியாபாரத்திற்கு தேவையான நிதியுதவி கிடைக்கும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் சிறப்பை கொடுக்கும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு விளையாட்டு துறையில் இன்று வெற்றி பெறும் நாளாக இருக்கும். அது மட்டுமில்லாமல் பாடங்களை மட்டும் கொஞ்சம் கவனமாக படியுங்கள். பாடத்தில் கவனத்தை செலுத்துங்கள். ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறமானது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகன் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 3
அதிர்ஷ்டநிறம் : பச்சை மற்றும் நீல நிறம்