Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “மனதில் தைரியம் பிறகும்”…பிரச்சினைகளை சமாளிப்பீர்கள்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் தைரியமும் புதிய தகவல்களால்  புதிய உற்சாகமும் பிறக்கும். மனைவியின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி கொடுக்கும். முகநூல் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்கள் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்படும். இன்று குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்துசேர்வார்கள். பயணங்கள் செல்ல நேரிடும்.

எந்த பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இருக்காது. இன்றைய நாள் ஓரளவு முன்னேற்ற கரமாகவே இருக்கும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது மிகவும் சிறப்பாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். எப்பொழுதுமே வாராவாரம் வெள்ளிக் கிழமையானால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்கி வாருங்கள். இந்த தான முறையை நாம் கடைபிடித்தால் கர்ம தோஷத்தில் இருந்து நாம் விடுபட முடியும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |