ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பால் கடைசி நேரத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை எடுப்பீர்கள். வியாபார விரோதம் உண்டாகும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உறவினர்கள் நண்பர்களிடம் மிக கவனமாக பழகுவது நல்லது. இன்று சிற்றின்ப செலவு ஏற்படும். மனதில் ஏதாவது கலக்கம் இருந்து கொண்டே இருக்கும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும்.
ஒதுங்கிச் சென்றாலும் வழியே வந்து சிலர் சண்டை போடக் கூடும். ஆகையால் கவனமாக இருப்பது மட்டும் நல்லது. இன்று முயற்சிகளின் பேரில் சில முக்கிய பணிகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன பூசல்கள் இருக்கும். எதையும் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. கூடுமானவரை இன்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நேரம் உங்களுக்கு சிறப்பான நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவராத்திரி அதாவது குபேர கிரிவலம் என்று சொல்வார்கள்.
குபேரர் பூமிக்கு வந்து திரு அண்ணாமலையாரை தரிசித்து கிரிவலப் பாதையில் கிரிவலம் செல்வார். அவர் செல்லும் பொழுது நாமும் குபேரரை தரிசித்து விட்டு கிரிவலம் சென்றால் ஏழு தலைமுறைக்கும் நமக்கு செல்வம் இருக்கும் என்பது ஐதீகம். ஆகையால் நாம் குபேரரரையும் திரு அண்ணாமலையாரையும் தரிசித்துவிட்டு கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு. கிரிவலம் செல்ல முடியாதவர்கள் மாலை 4 மணியிலிருந்து 6 : 30 க்குள் குபேரரை வணங்கி பின்னர் சிவபெருமானை வழங்குவது மிகவும் சிறப்பு. உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் செல்வ யோகமும் ஏற்படும். தயவுசெய்து இன்றைய நாளை நீங்கள் தவற விடாமல் இந்த பணியை செய்யுங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்