ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று தன லாபம் பெருகி மன மகிழ்ச்சி நிலவும். உடல் தெம்பாகி உற்சாகம் பிறக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். தன்னம்பிக்கை கூடுவதால் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். இன்று சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு மரியாதை கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப் பிடிப்பார்கள்.
பணி சார்ந்த விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். இன்றையநாள் ஓரளவு அதிர்ஷ்டகரமான நாளாகவே இருக்கும். இன்று நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் அனைத்துமே சிறப்பை ஏற்படுத்தும். மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை மட்டும் எண்ண வேண்டாம். இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். சக மாணவர்களிடம் பழகும் போது கொஞ்சம் கவனமாக பழகுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக அமையும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்