ரிஷபம் ராசி அன்பர்களே..!! உங்கள் குடும்பத் தேவைகள் இன்று அதிகரிக்கும். மற்றவரை நம்பி எவருக்கும் வாக்குறுதிகள் தர வேண்டாம். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணி நிறைவேற்றுவது நல்லது. கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராக இருக்கும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் இருக்கட்டும். இன்று முன் கோபத்தை குறைத்து நிதானத்தைக் கடைபிடிப்பது பிரச்சினை வராமல் தடுக்கும். பணவரவு சீராக இருக்கும்.
இன்று மாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண்கள் எடுப்பதற்கு உதவும். எதையும் சமாளிக்கும் திறமை இன்று இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும் எல்லா வகையிலுமே நன்மையும் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
உடல் நலம் இன்று சீராகவே இருக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி இருக்கும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகன் வழிபாடு உங்களை மிகவும் நல்வழிப்படுத்தும். நீங்கள் எடுக்கக் கூடிய காரியங்களை வெற்றியடையச் செய்யும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்