ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று பணி திறமையை வளர்த்துக் கொள்வதால் சில நன்மைகள் ஏற்படும். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணி சுமை கூடும். இன்று குறைந்த அளவிலேயே பணம் கிடைக்கும். உறவினர் வருகை வீட்டில் மகிழ்ச்சியை கொடுக்கும். இன்று உடல்நிலையில் மட்டும் கவனமாக இருங்கள். மருத்துவ செலவுகள் கொஞ்சம் இருக்கும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். சொத்து வாங்குவது விற்பது போன்றவை லாபகரமாக அமையும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உயரதிகாரிகளிடம் பேசும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக பேசுங்கள். ஓரளவு சிறப்பை கொடுக்கும். கணவன் மனைவி உறவு நன்றாகவே இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து செல்வது நல்லது. இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும்.
அதுமட்டுமில்லாமல் கல்வியில் இருந்த தடைகளும் விலகி செல்லும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் விதமாக இருக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்