Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “தியாக மனதுடன் செயல்படுவீர்கள்”.. எதிர்ப்புகள் விலகிச்செல்லும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று தியாக மனதுடன் செயல்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை இஷ்ட தெய்வ அருளால் சிறப்பாகவே இருக்கும். இன்று குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசியல் துறையினருக்கு பதவி கிடைக்க அனுகூலம் உண்டாகும். இன்று தொழில் வியாபாரம் நல்லபடியாகவே நடக்கும். ஆர்டர்கள் வந்து குவியும். சரக்குகளை அனுப்பும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக அனுப்புங்கள்.

பழைய பாக்கிகள் வசூல் ஆகும். ஆனால் எதிர்பார்த்தபடி இருக்காது பார்த்துக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பதவி உயர்வு நிலுவையில் உள்ள பணம் வருவது போன்றவை தாமதப்பட்டு தான் வந்து சேரும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டுகள் கிடைக்கும். இன்று தடைகள் விலகி செல்லும் எதிர்ப்புகளும் விலகிச்செல்லும்.

இன்று மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் செல்லும். கூடுமானவரை கவனமாக பாடங்களைப் படியுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை  மேற்கொள்ளும்போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |