ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை இன்று நாடக் கூடும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். மாறுபட்ட அணுகு முறையால் சாதிக்கும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இழுபறியான நிலை கொஞ்சம் காணப்படும்.
சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறைகாண கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று வாகனத்தில் செல்லும்போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கவனமாக இருங்கள். பெண்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களும் ஓரளவு சிறப்பை கொடுக்கும். இன்று உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும்.
சக மாணவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமையும் இன்று நீங்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்