Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “உள்ளத்தில் அமைதி கூடும்”.. ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாளாகவே இருக்கும். உள்ளத்தில் அமைதி கூடும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். தன வரவு திருப்திகரமாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்கும்.

அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கொஞ்சம் கவனமாக இருங்கள். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. உங்களுடைய இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். நட்பு ரீதியில் நிதானத்தை கடைபிடிப்பது நன்மையை கொடுக்கும். இன்று மாணவ செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை நிதானமாக படியுங்கள்.

படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |