ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்ட பணி நிறைவேற கூடுதல் முயற்சி தேவைப்படும். நண்பரின் ஆலோசனை நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். அரசு சார்ந்த சீரான ஓய்வு மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும் பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகத்தான் வந்து சேரும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை கொஞ்சம் வரக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்களும் ஏற்படக்கூடும். கூடுமானவரை கொஞ்சம் பொறுமையாக செயல்படுங்கள் அது போதும். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள்.
அப்பொழுதுதான் அடுத்த பாடம் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு இன்று காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்