ரிஷப ராசி அன்பர்களே…!!! இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். சொத்து பிரச்சனை சுமூகமாக முடியும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். இன்று கூட்டு வியாபாரம் திருப்தி தரும் வகையில் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது.
பணவரவை பொருத்தவரை திருப்திகரமாகவே இருக்கும். மேலிடத்தின் கனிவான பார்வை உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். சிறப்பான நாளாகவே இன்று இருக்கும். முடிந்தால் இன்று நீங்கள் ஆலயம் சென்று வாருங்கள் மேலும் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று உங்களுடைய வசீகரமான பேச்சு காதலில் வயப்படக்கூடிய சூழலை ஏற்படுத்தும் பார்த்துக்கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே இருக்கும். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்