Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “சிலர் சீண்டிப் பார்க்க கூடும்”….. வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம்…!!

ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று உங்களை சிலர் சீண்டிப் பார்க்க கூடும், அவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யாரிடமும் எந்தவித வாக்குவாதமும் மோதலும் இல்லாமல் நடந்து கொள்வது சிறப்பு. இன்று உங்களுக்கு ஓரளவு பணவரவு சிறப்பாக இருக்கும். செல்வ நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரம் கூட சிறப்பை கொடுப்பதாக இருக்கும். உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். வயிற்றில் உப்புசம் போன்ற சில விஷயங்கள் ஏற்படக்கூடும். இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.

அதுபோலவே குடும்பத்தாரிடம் பேசும் பொழுது கொஞ்சம் கவனமாகவே பேசுங்கள். காதலர்கள் இன்று எந்தவிதமான வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க கூடிய சூழல் இன்று நன்றாக இருக்கு. உத்யோகம் செல்பவர்களுக்கும் இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். முடிந்தால் இன்று ஆலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். மிக நன்றாக இருக்கும். அதுபோலவே கொடுத்த வாக்கை இன்று காப்பாற்றுவதற்கு கடினமாக உழைப்பீர்கள். மற்றவர்களின் பிரச்சினைகளுக்கு வழியே சென்று உதவிகளை செய்வதை மட்டும் தவிர்க்க வேண்டும்.

இன்றைய நாள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றியும் இருக்கும். மனம் உற்சாகமாக காணப்படும். இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |