ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று குதூகலம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களை பாராட்டும் விதமாக காரியம் ஒன்றை செய்வீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த தகவல்கள் வந்து சந்தோசத்தை கொடுக்கும். இன்று எந்த ஒரு வேலையையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள், அது போதும். பணவரவு அதிகமாகி உங்களுடைய பொருளாதாரம் உயரும். முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும்.
கட்டுப்பாடற்ற சிறிய விஷயங்களில் மனநிறைவு ஏற்படும். இன்று செய்கின்ற காரியங்கள் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். அதுமட்டுமில்லாமல் கணவன் மனைவிக்கு இடையே இன்று அன்பு நீடிக்கும். திருமண முயற்சிகள் சிறப்பாக நடக்கும். சுபகாரிய பேச்சுக்கள் இல்லத்தில் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. அது போலவே வெளியூரிலிருந்து உங்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும்.
இன்றைய நாள் உங்களுக்கு பொன்னான நாளாகவே காணப்படும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையுமில்லை. சிறப்பான முன்னேற்றம் இருக்கு. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும் சூரிய பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்