ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று உங்கள் செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். பண பரிவர்த்தனையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப தேவைகளை பணச் செலவில் நிறைவேற்றுவீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண அதிகமாக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டும்.
வாகனத்தில் செல்லும் போது பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியம் நல்ல படியாகவே இன்று நடக்கும். எதிலும் நீங்கள் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். அதேபோல நண்பர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் இருப்பது ரொம்ப நல்லது. இன்று கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
குடும்பத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும், ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்