Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “செயல்களில் கவனம் வேண்டும்”.. மனக்கவலை நீங்கும்.!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செயல்களில் கூடுதல் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை சரிசெய்தால் வளர்ச்சி சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளுங்கள். இன்று அரசியல் துறையினருக்கு இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும்.

மனக்கவலை நீங்கி நிம்மதி இருக்கும். பொருள் வரவும் இன்று அதிகரிக்கும். வாகனம் பூமி மூலம் லாபம் கிடைக்கும். இன்றையநாள் அளவற்ற மகிழ்ச்சியும் இருக்கும். செலவை மட்டும் கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள். பாடங்களை தெளிவாக படியுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள்.  சித்தர்கள் வழிபாடு எப்பொழுதுமே நன்மையயை  கொடுக்கக் கூடியதாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |