Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு…”அனுகூல காரணி பலம்பெறும்”…. ஆதாயம் சிறப்பு….!!!

ரிஷப ராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் சுதந்திரமாக ஈடுபடுவீர்கள். புதியவர்களின் நட்பு மனதில் மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம்பெறும். பண கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். இன்று புதிய வியாபார யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும். தீவிர முயற்சிகளால் அரசு சார்ந்த காரியங்கள் நடைபெறும்.

இன்று கன்னிப் பெண்களுக்கு திருமணம் கை கூடும். ஆனால் வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். இன்று ஆலயம் சென்று வாருங்கள் சிறப்பாகவே இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு பெருக்கெடுத்து ஓடும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆதாயம் சிறப்பாக இருக்கும்.

அது மட்டுமில்லாமல் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு மேல் கல்விக்கான முயற்சியும் நல்ல பலனையே கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : காவி மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |