மன தைரியம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் பேச்சில் ரசனை மிகுந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி புதிய அனுபவத்தை கொடுக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். குடும்ப பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள். இன்று மன தைரியம் அதிகரிக்கும். ஜீரணக் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடும். அந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். பணம் பல வழிகளில் செலவாகும் பார்த்துக்கொள்ளுங்கள். காரிய தாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக எந்தவித உத்திரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண் மனக்கவலை நீங்கும். வாகனத்தில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக செல்லுங்கள்.
நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்பட்டு தான் கைக்கு வந்து சேரும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடும். இருந்தாலும் கொஞ்சம் பொறுமையாக செயல்படுங்கள். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது ஆரஞ்சு நிற ஆடையோ அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்