ரிஷப ராசி அன்பர்களே …!!!!இன்று பணிகளுக்கு தகுந்த முன்னேற்பாடு அவசியம் .தொழில் வியாபாரம் சுமுகமாக இருக்கும். உறவினர் வகையில் செலவு கொஞ்சம் ஏற்படலாம். இன்று பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு மட்டும் செல்ல வேண்டாம் ,பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான பணியில் நிதானமான போக்கு காணப்படும். வியாபாரப் போட்டிகள் இருந்தாலும் அதனால் எந்த பாதிப்பும் இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணியை பார்ப்பது நல்லது. எதிர்பாராத சில இட மாற்றங்கள் பற்றிய தகவல் வரக்கூடும்.
இன்று வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும் போது ரொம்ப கவனமாக செல்லுங்கள் .இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். சுற்றுலாக்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகளும் நிச்சயம் இருக்கின்றன. இன்று தனவரவுக்கு எந்த குறையும் இல்லை ,ரொம்ப மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று லட்சுமி வழிபாட்டையும் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை :மேற்கு
அதிர்ஷ்ட எண் :3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்
நட்சத்திரப் பலன்கள்:
கிருத்திகை : இன்று மனக்கவலை விலகிச்செல்லும் நாளாக இருக்கும். நிதானமான போக்கு காணப்படும். உறவினர் வகையில் செலவு கொஞ்சம் கூடும்.
ரோகிணி: வெளியூர் பயணம் இன்பத்தை கொடுக்கும் .மனம் மகிழ்ச்சியாக இருக்கும் .தெய்வீக நம்பிக்கை கூடும் .
மிருகசிரீஷம் :இன்று ஆதாயம் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் கொஞ்சம் கவனமாக மேற்கொள்ளுங்கள் .குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும்