மனதில் துணிவும் தைரியமும் கொண்ட ரிஷபராசி அன்பர்களே…!! இன்று உத்தியோக மாற்றம் உறுதியாகும் நாளாக இருக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். கல்யாண கனவுகள் நினைவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். ஆபரண சேர்க்கையும் உண்டாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் ஏற்படும். கவனமாக பேசுவது நல்லது. இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும் கவனமாக இருங்கள்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சிலரை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலையும் இருக்கும். ஆகையால் இன்று பொறுமையை கையாள்வது மிகவும் நல்லது. இன்று குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சியான சூழல் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடையோ அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையோ எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்