தனது வசீகரப் பேச்சால் அனைவரையும் கவரக்கூடிய ரிஷப ராசி அன்பர்களே..!! இன்று மன சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு வழக்குகளால் வெட்டி செலவுகள் ஏற்படும். அரசு மூலமாக நடக்க வேண்டிய காரியங்கள் அலைச்சலுக்கு பிறகு நடந்த முடியும். இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உங்களுடைய வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை இன்று தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு வரவேண்டிய பணம் வந்துசேரும். குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை கொடுப்பதாகவே இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும்.
இன்று மனமகிழ்ச்சியும் ஏற்படும் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். கூர்ந்து பாடங்களை படிப்பது மிகவும் அவசியம். இன்று சக மாணவரிடம் பழகும் போது கொஞ்சம் கவனமாக பழகுங்கள். இன்று நீங்கள் முக்கியமான காரியங்களை மேற்கொள்ளும் போது முக்கியமான பணிக்கு செல்லும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து விதமான பிரச்னையும் சரியாகும். காரியத்தில் வெற்றி ஏற்படும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே முடியும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்