Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…குழப்பங்கள் உண்டாகும்…பொறுப்புகள் அதிகரிக்கும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!    இன்று நண்பரிடம் முன்னர் கேட்டு உதவி இப்போது கிடைக்கும். மனதில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சி மிகவும் சிறப்பாகவே இருக்கும். பணம் வரவு நன்மையைக் கொடுக்கும். வெளியூர் சென்று வருவதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். மனக் குழப்பங்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். காரிய வெற்றிக்கு கடுமையாக உழைப்பீர்கள்.

மாணவர்களுக்கு இன்று கூடுதல் பொறுப்புகள் இருக்கும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக எதையும் செய்யுங்கள் எதிலும் எச்சரிக்கையாக இருங்கள். காரியத்தில் சிறிய தடை தாமதம் அவ்வப்போது வந்து செல்லும். பிள்ளைகள் உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுப்பார்கள். உறவினர்களுடன் சுமுக உறவு இருந்தாலும் அவர்களால் கிடைக்கும் உதவி தாமதப்பட்டு தான் வந்து சேரும். அக்கம் பக்கத்தில் இடம் கூடுமானவரை அன்பாகவே நடந்து கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கவனம் வேண்டும்.

அதே போல பண பரிவர்த்தனையும் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். காதலர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். எந்த விதத்திலும் முன்னேற்றமே அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அடர் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் விநாயக பெருமானை வழிபட்டு அருளை பெறுங்கள் .

அதிர்ஷ்டமான திசை:கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் அடர் நீலம்

Categories

Tech |