ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்துவிடுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும், என்றாலும் திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதும் நன்மையை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்டமான எண் : 4
அதிஷ்டமான நிறம் : நீல நிறம்.