ரிஷப ராசி அன்பர்களே …! இன்று நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நடந்து முடியும். வாழ்க்கையில் புதிய திருப்பங்களை சந்திக்க கூடும். பிறருக்கு கட்டளை இடுகின்ற பணி உங்களுக்கு கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும் மனமும் மகிழ்ச்சியாக காணப்படும் அனைத்து விஷயங்களிலும் வெற்றி என்று ஏற்படும். ஆனால் நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் கொள்ள வேண்டும்.
வயிறு கோளாறு சம்பந்த பிரச்சினைகள் இருக்கும். அதேபோல உஷ்ணம் சம்பந்தமான சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும் அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். அதனால் தூக்கம் குறையும். எதிர் பாலினரின் நட்பு கிடைக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம். கூடுமான வரை பொறுமையாக இருந்தால் போதுமானது. காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். அதிகாரமுள்ள பதவிகள் தேடி வரக்கூடும்.
ஆனால் வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.