ரிஷபம் ராசி அன்பர்களே…!! இன்று பூமி வாங்கும் யோகம் கிட்டும். புதிய பாதை புலப்படும். உங்களுடைய தாய்வழி மூலம் ஆதரவும் உண்டாகும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். தொழில் ரீதியாக நீங்கள் எடுத்த முயற்சிக்கு மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வார்கள். இன்று தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு சூழ்நிலைகள் ஏதுவாக இருப்பதால் நீங்கள் எந்த முயற்சியும் மேற்கொண்டாலும் வெற்றி கிடைக்கும். செலவைக் குறைப்பதன் மூலம் பணத்தட்டுப்பாடு குறையும் பார்த்துக்கொள்ளுங்கள். பேச்சில் கடுமை காட்டாமல் இருப்பது நன்மை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிபுரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். அதேபோலவே குறிப்பாக இயந்திரங்களை இயக்கும் போது கவனமாக இயக்குங்கள். தீ போன்றவற்றை கையாளும் பொழுது கவனமாக கையாளுங்கள். இன்று நாள் ஓரளவு சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது இளம் ஊதா நிறத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை வைத்துக்கொண்டால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். வெற்றியும் கிடைக்கும். அதுபோல காலையில் எழுந்ததும் மனதார விஷ்ணு பகவானை நினைத்து வழிபட்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா மற்றும் இளம் பச்சை நிறம்