இந்திய நிதி அமைச்சகத்தின் இணைச் செயலர் உட்பட 25 பேர் ஐ.நாவின் சிறப்பு வரி குழுவில் இடம் பெற்றுள்ளார்கள்.
2021-2025 ஆம் ஆண்டிற்கான ஐ.நா வின் வரி குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சிறப்பு வாய்ந்த குழுவில் இந்திய நிதி அமைச்சகத்தின் இணை செயலாளர் உட்பட உலகம் முழுவதிலுமுள்ள வரித்துறையின் மிகவும் சிறப்பு வாய்ந்த நபர்கள் 25 பேர் இடம் பெற்றுள்ளார்கள்.
இந்த ஐ.நாவின் சிறப்பு வரி குழுவிற்கு நியமனம் செய்யப்பட்டிருப்பவர்கள் வரி தொடர்பான விஷயத்தில் சர்வதேச ஒத்துழைப்பை கொடுக்கும் விதமான பணிகளில் ஈடுபடுவார்கள். மேலும் இந்த சிறப்பு வரி குழு உறுப்பினர்கள் வரி தொடர்பான கொள்கைகளை உருவாக்கி செல்லும் நாடுகளின் முயற்சிகளுக்கு வழிகாட்டும் பணியிலும் ஈடுபடுவார்கள்.