மேற்கு வங்க மாநிலத்தில் பெட்ரோல் டீசல் மீதான வரியை அம்மாநில அரசு குறைத்துள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வாகனஓட்டிகள் கடு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பெட்ரோல் டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூபாய் அரசு1 ஆக குறைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வரி குறைப்பு பிப்ரவரி 22 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலையை ஓரளவுக்குக் குறைக்கும் வகையில் மேற்கு வங்க அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தை விட பெட்ரோல் டீசல் விலை சற்று குறைவாகவே உள்ள மேற்கு வங்கத்தில் வரியைக் குறைக்கும் போது ஏன் தமிழகத்தில் குறைக்கக் கூடாது என்ற கேள்வி எழும்பியுள்ளது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்குமாறு பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.