Categories
தேசிய செய்திகள்

ராமர் கோயில் கட்ட நிதியளித்தால் வரி விலக்கு!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை வழங்கினால் வரி விலக்கு அளிக்கப்படும் என மத்திய நிதித் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,  உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இடமும், பொது வழிப்பாட்டு தலமுமாக விளங்கும் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி அளிப்பவர்களுக்கு 80ஜி என்ற வருமானவரிச் சட்டத்தின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும் வருமானவரிச் சட்டம் 80ஜி-யின் படி, நன்கொடை அளிப்பவர்களின் சொத்து மதிப்பில் 10 சதவீதத்திற்கும்  குறைவாக  நன்கொடை வழங்கினாலும், இந்தச் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அங்கு ராமர் கோயில் கட்டும் பணி   15 பேர் அடங்கிய குழுவின்  மேற்பார்வையில் தொடங்கியது. பின்னர்  கொரோனா ஊரடங்கால் அந்தப் பணிகள் தற்காலிகமாக  நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |