Categories
தேசிய செய்திகள்

“வரி அதிகமாக உள்ளது… இந்தியாவில் தொழிலை பெருக்கப்போவதில்லை” – டொயோட்டா

இந்தியாவில் வரி குறைக்கப்படாவிட்டாலும் இங்கிருந்து வெளியில் செல்ல மாட்டோம் என  டொயோட்டா நிறுவனத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

டொயோட்டா என்ற கார் நிறுவனம் சென்ற 1997ல் இந்தியாவில் செயல்பட தொடங்கியது. இந்தியபிரிவின் 89 சதவிவிகித பங்குகளை ஜப்பானில் உள்ள அதன் தாய் நிறுவனம் கொண்டுள்ளது. தற்போது, வரிகள் அதிகமாக உள்ளதால், இந்தியாவில் தனது தொழிலை விரிவாக்க போவதில்லை என டொயோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த செய்தியை, டொயோட்டாவின் பிரிவான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டரின் துணைத் தலைவர் சேகர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தபின்னர் வரிகளை உயர்த்துவது, வெளிநாட்டு நிறுவனங்களை அரசு விரும்பவில்லை என்பதை காட்டுவதாகவும், வரிகளை குறைக்காவிட்டாலும் இந்தியாவை விட்டு வெளியேற மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

 

Categories

Tech |