Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

டயர் கடையில் திருட்டு…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

டயர் கடையில் பணம், கண்காணிப்பு கேமராவை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள போல்பேட்டை பகுதியில் செல்வக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் எட்டயபுரம் பகுதியில் டயர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் செல்வகுமார் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதன்பின் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.15 ஆயிரம்,  கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது. இது குறித்து செல்வக்குமார் தூத்துக்குடி சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பணம் மற்றும் கண்காணிப்பு கேமராவை திருடி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |