பிரிந்து சென்ற மனைவியால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லுவிலை பகுதியில் டெயிலாரான சுரேஷ் வசித்து வந்தார். சுரேஷின் மனைவி ஒரு வருடத்திற்கு முன் வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடனே சென்று விட்டார். இந்நிலையில் மனைவிக்கு விவாகரத்து கொடுக்க சொல்லி அந்த நபர் சுரேஷை அடிக்கடி வற்புறுத்தியுள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்த சுரேஷ் தனது வீட்டு சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுரேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து சுரேஷின் தாயாரான ராதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.