அனைவர்க்கும் காலை, மாலை என டீ குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி கொண்டிருக்கின்றனர். அதில் நாம் இயற்கை அளித்த கருப்பட்டியில், டீ குடித்து உடலுக்கு நன்மை அளிக்கலாமே..!
பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரில் உள்ள வைட்டமின்களும், கனிமச் சத்துக்களும் ஏராளமாக அளவில் நிறைந்துள்ளது. இந்த பதநீரில் இருந்து தயாரிக்கப்படுவது தான் கருப்பட்டி. இதனை பனைவெல்லம் என்றும் அழைப்பார்கள்.
இது தீங்கு விளைவிக்கும் சர்க்கரைக்கு சிறந்த மாற்றுப் பொருளாக விளங்கும். பழங்காலத்தில் எல்லாம் இனிப்பு சுவைக்காக கருப்பட்டியை தான் அதிகம் பயன்படுத்தி வந்தார்கள். கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
மேலும் கருப்பட்டி கெமிக்கல்கள் ஏதும் சேர்க்காமல் இயற்கையாக வரும் பதநீரை காய்ச்சி தயாரிக்கப்படுவதால் அதிலுள்ள சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைத்து உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இதில் உள்ள மருத்துவ குணங்கள் உடலில் உள்ள பல பிரச்சனைகளை அகற்றும். இந்த கருப்பட்டியை, சர்க்கரைக்கு பதிலாக காபி அல்லது டீ-யில் சேர்த்து குடிப்பதால் நன்மை கிடைக்கும். கருப்பட்டியில் அத்தியாவசிய செயல்பாட்டிற்கு தேவையான கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது.
உடலின் ஆற்றல் அதிகரிக்கும். ஆனால் நாம் தற்போது பயன்படுத்தும் சர்க்கரையில் கலோரிகள் மிகவும் அதிகம் என்பதை மறக்கவேண்டாம். உணவு உட்கொண்ட பின்னர் கருப்பட்டியை சேர்த்து உட்கொண்டால் அது செரிமான உறுப்புகளை தூண்டி எளிதில் செரிமானம் நடைபெற செய்யும்.
வயிற்றில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரித்து எளிதில் செரிமானமாக செய்யும். ஒருவரது உடலில் செரிமானம் சீராக நடைபெற்று உடல் இயக்கமும் மலச்சிக்கல் பிரச்சினைகள் வராமல் இருக்கும். இவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் தான் ரத்த சோகை பிரச்சனை ஏற்படும் எனவே ரத்த சோகை ஏற்படாமல் இருக்க கருப்பட்டியை அன்றாட உணவுகளிலும் காபியாகவும் சேர்த்து வாருங்கள். கருப்பட்டியை ஒருவர் தொடர்ச்சியாக எடுத்து வந்தால் கல்லீரல் செயல்பாட்டை சீராக்கும்.
இவை கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை முழுமையாக வெளியேற்றி சுத்தம் செய்ய உதவும்.சளி, இருமல், ஜலதோஷம் ஆகியவற்றிலிருந்து விடுபட வேண்டுமானால் அன்றாடம் குடிக்கும் காபி, டீயில் கருப்பட்டியை சேர்த்துக்கொள்ளுங்கள்.
மூக்கடைப்பில் இருந்தும் விடுதலை அளிக்கும். தொண்டைப் புண்ணை சரிசெய்யும் ஆண்டி ஆக்சிடென்ட், பொட்டாசியம் ,மெக்னீசியம், காப்பர், ஜிங்க், இரும்புச்சத்து போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி கிருமிகள் மற்றும் தொற்றுகளை எதிர்த்து போராடி உடலுக்கு நல்ல பாதுகாப்பு வழங்கும்.
ஒருவர் தினமும் கருப்பட்டி உட்கொண்டால் நோய்கள் அண்டாமல் தடுக்கலாம். இது ஒரு இயற்கை சுவையூட்டி, இது கெமிக்கல் எதுவும் கலக்காமல் தயாரிப்பதால் தான் இது மிகவும் ஆரோக்கியமானது. மேலும் கருப்பட்டி சேர்த்து சமைக்கும் எந்த ஒரு இனிப்பு பண்டம் மிகவும் சுவையாக இருக்கும். எனவே உணவில் பயன்படுத்தும் வழக்கத்தை கடைபிடியுங்கள்.
இவற்றில் அடங்கியுள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை பராமரிப்பது, ரத்த அழுத்தத்தையும் சீராக்கி ரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கும். நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும் அவசியமானது. மேலும் இது நரம்புகளில் மென்மையான செயல்பாட்டிற்கு உதவி புரியும்.
ஒற்றை தலைவலிக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். இதற்கு வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம் அல்லது குடிக்கும் டீயில் கருப்பட்டியை சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம் ஒற்றைத் தலைவலி நீங்கும். அடிக்கடி விக்கல் வருபவர்கள் வெதுவெதுப்பான நீரில் இஞ்சி பவுடர் மற்றும் கருப்பட்டி சேர்த்து கலந்து குடித்தால் விக்கல் நின்றுவிடும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கருப்பட்டியை உணவில் சேர்ப்பதன் மூலம் குழந்தைக்கு சுத்தமான தாய்ப்பால் கிடைக்கும். இதனால் குழந்தையின் ஆரோக்கியமும், வளர்ச்சியும் சிறப்பாகவே இருக்கும். உப்பிய வயிறு மற்றும் உடலில் நீர் தேக்க பிரச்சினை கொண்டவர்கள் கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம் இப்பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு உடனடி நிவாரணம் கிடைக்கும்.