தேநீரில் மேற்கொண்டு மருத்துவ குணம் அதிகரிப்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
இந்தியாவின் தேசிய பானம் என்று அழைக்கப்படும் தேனீர் பெரும்பாலான இந்தியர்களால் விரும்பப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும், இந்த தேநீர் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்படுகிறது. இந்த தேநீரில், பல வகைகளும் உண்டு. தமிழகத்தில் மருத்துவ குணம் நிறைந்த ஸ்பெஷல் டீ என்றால் அது இஞ்சி டீ உள்ளிட்டவை தான்.
இதனுடன் மற்றொரு ஒரு பொருளையும் டீயுடன் சேர்த்துக்கொண்டால் என்ன நன்மை என்பது குறித்து இனி காண்போம், இந்திய மக்களில் பெரும்பாலானோர் தேனீர் அருந்தி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.
ஆகையால் தேனீருக்கு ஆரோக்கியம் சேர்ப்பதில் முக்கியமானது கிராம்பு. உடலில் தொற்று நோய்கள் தாக்காமல், ஈறுகள் பிரச்சனை, அல்சர் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கின்றது. மேலும் தொண்டைப்புண், சளி, இருமல், தலைவலி குணமாக உதவுகிறது. கிராம்பு வாங்கும்போது பெரிய கிராம்புகளை தேர்ந்தெடுப்பது மிகமிக நல்லது.