Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தீராத கடன் தொல்லை…. உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

கடன் தொல்லையால் டீக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள கந்தம்பாளையம் பகுதியில் இருக்கும் நாச்சிமுத்து தெருவில் வெங்கட் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வெங்கட் குமார் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதன்பின் மன உளைச்சலில் இருந்த வெங்கட் குமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வெங்கட் குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |