திடீரென வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருமாள் நாயக்கர் பகுதியில் அருணாசலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறார். அதன்பின் கடந்த 2 தினங்களாக இவரின் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்த போது உடல் அழுகிய நிலையில் அருணாச்சலம் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அருணாச்சலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருணாச்சலத்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.