Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

BREAKING : சென்னையில் டீ கடைகளை மூட உத்தரவு …..!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள டீ கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை தவிர ஒட்டு மொத்தமும் முடக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளும், தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் டீக்கடைகள் தற்போது டீ கடைகளை மூட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதால் கொரோனா வைரஸ் தாக்கிவிடும் என்ற அச்சத்தால் இன்று மாலை 6 மணி முதல் டீ கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் விற்பனையாகம் சமைத்த உணவுகளை வீடுகளுக்கு விநியோகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி மளிகை பொருட்களை காய்கறி கடை விநியோகம் செய்யலாம் என மாநகராட்சி நிர்வாகம் கூறியிருக்கிறது.காய்கறிக்கடைகளில் ஒருவருக்கு ஒருவர் இடைவெளியை விட்டு நிற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |