தமிழகத்தில் டீ கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் நாடு முழுதும் அதிகரித்து வரும் நிலையில் வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல்வேறு வகைகளில் கட்டுப்பாடு தளர்வுகளை தொடர்ந்து அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசு டீக்கடைகள், பெட்ரோல் பங்குகளுக்கு சில தளர்வுகளை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையை தவிர பிற இடங்களில் வரும் 11 ஆம் தேதி முதல் டீ கடைகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். சென்னையை தவிர பிற இடங்களில் டீ கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டீ கடைகளில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும். நிபந்தனைகளை கடைபிடிக்காவிட்டால் டீக்கடைகள் உடனடியாக மூடப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் 24 மணி நேரமும் பெட்ரோல் பங்குகள் செயல்படும். சென்னையை தவிர தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை டீ கடைகளைத் திறக்கலாம்.