11-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக ஆசிரியரை சிறையில் அடைக்க நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மறுப்பினி சாலையில் எஸ்.எப்.எஸ். மெட்ரிக்குலேசன் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வேலை பார்க்கும் கணிதம் மற்றும் வணிகவியல் ஆசிரியரான சண்முகநாதன் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பிறகு பள்ளி நிர்வாகத்தினர் சண்முகநாதனை பணி நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சண்முகநாதனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை அக்டோபர் 7-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் அந்த மாணவியிடம் ஆசிரியர் ஆபாசமாக பேசும் ஆடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.