Categories
உலக செய்திகள்

புளோரிடா மாகாண கற்றல் மையத்தில்… 4 வயது சிறுவனை தாக்கிய ஆசிரியை கைது…!!

புளோரிடா மாகாணத்தில் ஒரு பள்ளி ஆசிரியை நான்கு வயதுடைய சிறுவனை பல தடவை தாக்கியதால் கைதாகியுள்ளார்.

புளோரிடா மாகாணத்தில் கிண்டர் கேர் கற்றல் மையத்தில் பணிபுரியும் ஆசிரியையான ஆஷ்லே ரிச்சர்ட்ஸ், நான்கு வயதுடைய ஒரு சிறுவனை பல தடவை தாக்கியுள்ளார். இது குறித்து ஒரு நபர் புகார் தெரிவித்திருக்கிறார். அதில், விளையாட்டு மைதானத்தில் இருந்து கதறி அழும்  சத்தம் கேட்டது.

அங்கு சென்று பார்த்தபோது, ஆஷ்லே ரிச்சர்ட்ஸ், தன் கைகளாலும் முட்டியாலும் சிறுவனின் தலையின் பின்புறம் குத்துவதை பார்த்தேன் என்று தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, காவல்துறையில் குழந்தையை துஸ்பிரயோகம் செய்த வழக்கில் அந்த ஆசிரியையை கைது செய்தார்கள்.

அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவர் தான் சிறுவனை அடிக்கவில்லை  என்றார். ஆனால், சிறுவன் சிரித்துக் கொண்டிருப்பதை தடுப்பதற்காக தன் கைகளால் அவன் வாயை மூடினேன் என்று கூறியிருக்கிறார். அந்த சிறுவன் தெரிவித்ததாவது, என் சகோதரருடன் சண்டை போட்டேன்.

அதற்காக ஆசிரியை என்னை தாக்கினார். என் தலையிலும், கண்களிலும் அடித்தார் என்று கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, அந்த கற்றல் மையம், அந்த ஆசிரியரை பணி நீக்கம் செய்யததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |