ஆசிரியர் தேர்வின் மதிப்பெண் விவரம் வருகின்ற 22_ஆம் தேதி வெளியாகுமென்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் 8_ஆம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளும் , 9-தேதி தாளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இதில் முதல் தாள் தேர்வை 1,62,314 பேர் எழுதினர்.இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டது. தகுதி தேர்வின் இராண்டாம் தாளை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதியதால்
அதற்கான முடிவுகள் அறிவிக்க தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று வெளியான ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளின் மதிப்பெண் விவரம் வருகின்ற 22ஆம் தேதி வெளியிடப்படுமென்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மதிப்பெண்ணை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் Www trb.tn.nic.In என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.