பிரிட்டனில் 13 வயது சிறுவனை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து தந்தையாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் நாட்டின் பெர்ஜியஸ் வின்சன்ட் நகரை சேர்ந்தவர் லியா கார்டெக்ஸ். இவர் அதே பகுதியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இந்நிலையில் சென்ற ஆண்டு லியா மதுபோதையில் 13 வயது சிறுவன் ஒருவன் வீட்டில் தனியாக இருக்கும்போது உள்ளே நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதன் பின்பும் தொடர்ந்து அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். லியாவுக்கு பாய்பிரெண்ட் ஒருவரும் இருக்க அவருக்கு இந்த விஷயம் தெரியாது. பின் இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில் அவருக்கு குழந்தை ஒன்று பிறந்து உள்ளது.
இந்நிலையில் லியாவின் கணவருக்கு சிறுவன் குறித்து அப்படி இப்படியுமாக தகவல் தெரிய வர காவல் நிலையத்தில் மனைவி மீது புகார் அளித்து அதன்பின் டிஎன்ஏ டெஸ்ட் மேற்கொண்டுள்ளார்.அதில் குழந்தைக்கு தந்தை 13 வயது சிறுவன் என்பதை அறிந்தவுடன் செய்வதறியாமல் திகைத்து நின்றார்.