Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் வெறிச்செயல்….. பறி போன மாணவியின் கண்….. நெல்லை அருகே சோகம்….!!

நெல்லை அருகே ஆசிரியரின் வெறித்தன நடவடிக்கையால் மாணவியின் கண் பறிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தரசன். இவரது மகள் முத்தரசி.  முத்தரசன் வெளிநாட்டில் வசித்து வருவதால் மகளை பாட்டியின் வளர்ப்பில் விட்டுச் சென்றுள்ளார். முத்தரசி அதே பகுதியில் உள்ள புனித அன்னம்மாள் தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு பாடம் எடுக்கும் ஆதிநாராயணன் என்ற ஆசிரியர் நேற்றையதினம் மாணவி ஒருவரை அழைத்து கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் பதில் கூறாத  காரணத்தினால், பிரம்பால் வெறித்தனமாக அடித்துள்ளார். இதில்,

பிரம்பு முனைப் பகுதி உடைந்து வேகமாகச் சிதர எதிரே அமர்ந்திருந்த மாணவி கண்ணில் கீறியது. இதில் வலியால் துடித்த அவரை பள்ளி நிர்வாகம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தது, பின் தகவல் அறிந்த மாணவியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர்.

பின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த  காவல்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு தலைமறைவான ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |