உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் ரத்ன இனியத்பூர் என்ற பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஷகுப்தா பர்வீன் (27) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். இவர் வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது சில மாணவர்கள் ஆபாசமாக பேசி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி ஆசிரியை வகுப்பறையில் இருந்து நடந்து சென்ற போது சில மாணவர்கள் ஐ லவ் யூ என்று கூறியுள்ளனர். இந்த சம்பவத்தையும் மாணவர்கள் தங்களுடைய செல்போனில் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவும் நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருவதோடு மாணவர்களின் செயல்களை பார்த்து வருத்தமும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாணவர்களின் செயலால் மனமுடைந்து போன ஆசிரியர்கள் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆசிப், அதஷ், அமென் ஆகிய 3 மாணவர்களையும், ஷகுபா என்ற ஒரு மாணவியையும் இன்று கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Viral video from meerut
Its very disgusting.. pic.twitter.com/UYNpZDWkaM— Avinash Chaudhry (@Akchaudhrry) November 27, 2022