Categories
உலக செய்திகள்

லண்டனில் ஆசிரியை கொலை.. 24 மணிநேரங்களுக்கு பிறகு மீட்கப்பட்ட உடல்..!!

லண்டனில் கொலைசெய்யப்பட்ட ஆசிரியையின் உடல் 24 மணி நேரங்களுக்கு பின்பு மீட்கப்பட்டுள்ளது.

லண்டனில் இருக்கும், OneSpace community centre அருகிலுள்ள இடத்தில், Sabina Nessa என்ற ஆசிரியையின் உடல் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்பு, அவரை விடுவித்து விட்டனர்.

ஆசிரியையின் உயிரிழப்பு, பள்ளி நிர்வாகம், மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் தலைவரான, லிசா வில்லியம்ஸ், அன்பு, அக்கறை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன்  பணியாற்றக்கூடியவர் என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில், Sabinaவின் உடல், உடற்கூராய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான முடிவு, தற்போது வரை கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |