மாணவி ஆசிரியர் இருவரும் காதலித்த போது எடுத்த வீடியோ வெளியானதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
ஒடிசா மாநிலம் போலாங்கீர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கல்லூரியில் படித்து வந்தார். அவரது ஆசிரியரான கணேஷ் செல்மா என்பவரும் அந்தப் பெண்ணும் காதலித்து வந்தனர். கணேஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்ததை நம்பி பலமுறை அவருடன் அந்த மாணவி தனியாக இருந்துள்ளார். இதை கணேஷ் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்துள்ளார். அதன்பின் அந்த மாணவியை கைவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
அதுமட்டுமல்லாமல் மாணவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.