Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்… அபராதம் விதித்த அதிகாரிகள்… ஆட்சியர் திடீர் ஆய்வு…!!

தேனியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமிற்கு ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வீரபாண்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தடுப்பூசி முகாமிற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தியுள்ளார். இதனையடுத்து அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அல்லி நகரத்திற்கு சென்ற ஆட்சியர் பள்ளி வளாகத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் தேனி பழைய பேருந்து நிலையத்திற்கு சென்ற ஆட்சியர் அங்கு முகக்கவசம் அணியாமல் இருந்த பேருந்து ஓட்டுனர் பொதுமக்கள் ஆகியோர் அனைவருக்கும் அபராதம் விதிக்கும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அப்போது  பேருந்து நிலையத்தில் உள்ளே கழிவு நீர் செல்லும் பாதையின் மேல் அடைக்கப்பட்ட இரும்பு சேதமடைந்து இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளார். இதனை கேட்டறிந்த ஆட்சியர் முரளிதரன் உடனடியாக இதனை சரிசெயும்மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த ஆய்வின்போது நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வன், மாவட்ட கல்வி அலுவலர் ராகவன் உட்பட அரசு அதிகாரிகள் பலரும் உடனிருந்துள்ளனர்.

Categories

Tech |