சென்னை: ‘மகாநடி’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின், ‘தலைவர் 168’ படக்குழுவினர்கள் கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘மகாநடி’. மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்த இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், சாவித்திரியாகவே வாழ்ந்திருந்தார்.
இந்தப் படம் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்ட நிலையில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு தேசிய விருது வென்றவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திடமிருந்து சிறந்த நடிகைகான தேசிய விருதைப் பெற்றார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படமான ‘தலைவர் 168’ படத்தில் கமிட்டாகியுள்ள கீர்த்தி சுரேஷ், தேசிய விருது பெற்ற கையோடு ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ள படக்குழுவுடன் இணைந்தார். இதைத்தொடர்ந்து தேசிய விருது பெற்ற கீர்த்திக்கு படக்குழுவினர் கேக் வெட்டி வாழ்த்தினர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் படக்குழுவினரோடு இணைந்து கீர்த்திக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சிரிப்பு, அழுகை, முகபாவனை என அனைத்திலும் மகாநடி படத்தில் சாவித்திரியை உரிதெடுத்தாற்போல் திரையில் தோன்றி சிலிர்க்க வைத்தார் கீர்த்தி சுரேஷ். அவரது அர்ப்பணிப்பு மிகுந்த நடிப்புக்கான கெளரவமாக தேசிய விருது வழங்கப்பட்டிருக்கும் நிலையில், கீர்த்தியின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
. Team #Thalaivar168 congratulates @KeerthyOfficial for winning the National Award for Best Actress.@rajinikanth@directorsiva@sunpictures@vetrivisuals@sooriofficial@Ramoji_FilmCity@v4umedia_#66thnationalfilmawards pic.twitter.com/KEL4TuD9vn
— RIAZ K AHMED (@RIAZtheboss) December 25, 2019