ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக ஷமி சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நாளை மறுநாள் முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து உட்பட்ட 16 அணிகள் பங்கேற்று உள்ளது. இதில் இந்தியா நேரடியாக சூப்பர் 12 சுற்றில் வரும் 23ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.. இந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாலின் பெர்த் நகருக்கு சென்று, அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக இந்திய அணியில் காயம் காரணமாக ஜஸ்பிரிட் பும்ரா டி20 உலக கோப்பை தொடரிலிருந்து விலகி இருக்கிறார். இதற்கிடையே ரிசர்வ் வீரராக இடம் பிடித்திருந்த தீபக் சாஹரும் காயம் காரணமாக விலகி இருப்பதால் பும்ராவுக்கு பதில் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
தீபக்சஹர் காத்திருப்பு வீரராக இருந்தபோது அவரை தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதேசமயம் ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், அவர் விலகி உள்ளதால் சிராஜ் பும்ராவின் இடத்திற்கு சரியாக இருப்பார் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட சில ரசிகர்களும் கூறி வந்தனர்.
ஏனென்றால் சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடி தொடர்நாயகன் விருதையும் சிராஜ் வென்றிருந்தார். நல்ல பார்மில் இருந்ததால் அவருக்கு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று பலராலும் கூறப்பட்டது.. ஆனால் சீனியர் வீரர் முகமது ஷமிக்கே வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில் அதனை பிசிசிஐ உறுதிப்படுத்தி உள்ளது
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக முகமது ஷமியை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு நியமித்துள்ளது. ஷமி ஆஸ்திரேலியா சென்றுள்ளதால், பயிற்சி ஆட்டங்களுக்கு முன்னதாக பிரிஸ்பேனில் உள்ள அணியுடன் இணைவார். முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் பேக்அப்களாக பெயரிடப்பட்டு விரைவில் ஆஸ்திரேலியா செல்லவுள்ளனர்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.
🚨 NEWS 🚨: Shami replaces Bumrah In India’s ICC Men’s T20 World Cup Squad. #TeamIndia | #T20WorldCup
Details 🔽https://t.co/nVovMwmWpI
— BCCI (@BCCI) October 14, 2022